என்னா வெயில்… சூரியன் ஓய்வெடுக்குமா?: வானிலை அப்டேட்!

Published On:

| By Minnambalam Login1

september 18 weather

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கும் (செப்டம்பர் 18 ,19)) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(செப்டம்பர் 18) அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இது செப்டம்பர் மாதமா அல்லது மே மாதமா என்று நினைக்கும் அளவுக்கு சூரியன் சுட்டெரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில்  மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாகவும் 41° செல்சியஸும் , குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.6° செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “செப்டம்பர் 18 முதல் 24 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். செப்டம்பர் 18 ,19 ஆகிய தேதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்

இன்று(செப்டம்பர் 18) முதல் 22 வரை, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

இன்று முதல் செப்டம்பர் 22 வரை, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

இன்று,தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

”என் மகன் என்கவுண்டருக்கு சம்போ செந்தில் தான் காரணம்”: காக்காதோப்பு பாலாஜியின் தாய் கண்ணீர்!

இந்தியாவின் மொத்த ஜி.டி.பியில் 30 சதவிகிதம் கொடுக்கும் தென் மாநிலங்கள்… தமிழகத்தின் பங்கு எவ்வளவு?

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காலை 11 மணி வாக்கு நிலவரம் என்ன?