மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார்… 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகம்

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (ஆகஸ்ட் 4) உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,

தலைமை காவலர் படைப்பிரிவின் ஐஜியாக இருந்த செந்தில் குமார் மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வரி காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்.

தமிழக காவலர் வீட்டு வசதி கழக தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஓய்வு பெற்ற நிலையில், அந்த பொறுப்புக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் நியமனம்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொறுப்பு, ஐபிஎஸ் அதிகாரி தினகரனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தலைமை காவலர் படைப்பிரிவு ஐஜி ரூபேஷ் குமார் மீனா நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நுண்ணறிவு பிரிவு ஐஜியாக இருந்த ரத்தோட் சமூக நீதி மற்றும் மகளிர் உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்.

சமூக நீதி மற்றும் மகளிர் உரிமைகள் பிரிவு ஐஜியாக இருந்த சாமுண்டேஸ்வரி காவல் தலைமை பிரிவின் ஐஜியாக நியமிக்கபட்டுள்ளார்.

சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில் குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்.

நெல்லை மாநகர காவல் ஆணையராக இருந்த மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமனம்.

திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த பிரவேஷ் குமார் சென்னை பெருநகர வடக்கு மண்டல சட்டம் – ஒழுங்கு இணை ஆணையராக நியமனம்.

காவல் நல்வாழ்வு பிரிவின் ஐஜி நஜ்மல் ஹூடா காவல் நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக நியமனம்.

 

சென்னை பெருநகர வடக்கு மண்டல சட்டம் – ஒழுங்கு இணை ஆணையராக இருந்த அபிஷேக் தீக்‌ஷித், ரயில்வே காவல் பிரிவின் டிஐஜியாக நியமனம்.

சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் என்.தேவராணி வேலூர் சரக டிஐஜியாக நியமனம்.

வேலூர் சரக டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர், சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமனம்.

திண்டுக்கல் சரக ஐஜி அபினவ் குமார், ராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமனம்.

ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, காவல் நலத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Olympic 2024: பாரிஸில் இந்தியாவுக்கு அதிர்ச்சி… நடுவர்கள் ஒருதலைப்பட்சமா?

ஆறாவது நாளாகத் தொடரும் மீட்புப்பணி… மீளும் வயநாடு

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0