செந்தில் பாலாஜி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!

தமிழகம்

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கக்கோரி புதுக்கோட்டையை சேர்ந்த சண்முக சுந்தரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி இருக்கும் போது அவர் அமைச்சராக தொடர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடர்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாதல் அந்த வழக்குகளோடு சேர்த்து அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக்கோரிய வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பதிவாளர் பட்டியலிட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

செல்வம்

“நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை” – அமைச்சர் பெரியகருப்பன்

லியோ பாடலுக்கு எதிர்ப்பு… படக்குழு செய்த மாற்றம்!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0