திடீர் விருந்தாளிகளுக்கு, அதிரடியாக ருசியுடன் கூடிய ஒரு ஸ்பெஷல் டிஷ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சேமியா பிர்ணி செய்து அசத்தலாம். வீட்டிலுள்ளவர்களையும் மகிழ்விக்கலாம்.
என்ன தேவை?
சேமியா – 2 டேபிள்ஸ்பூன்
பால் – ஒரு லிட்டர்
சர்க்கரை – 250 கிராம்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பு (மூன்றும் கலந்து) – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
சேமியாவைச் சிறியதாக உடைத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். முந்திரி, திராட்சையையும் நெய்யில் வறுக்கவும். பிறகு கால் டம்ளர் பாலில் சேமியாவை வேகவிட்டு, வெந்ததும் ஆற வைக்கவும். மீதியுள்ள பாலுடன் சர்க்கரை சேர்த்து அது நன்கு சுண்டும் வரை காய்ச்சவும். ஆறிய சேமியாவுடன் பாதாம் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு, ஏலக்காய்த்தூள், சுண்ட வைத்த பால் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்றும் பருகலாம். கெட்டியாக இல்லாமல், சற்று தளர இருந்தால் சுவையாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சேமியா வெஜ் பிரியாணி
சண்டே ஸ்பெஷல்: தினமும் சூப் குடிப்பது நல்லதா, கெட்டதா?