sembarambakkam extra water opened today

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழகம்

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கக் கூடிய செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் இன்று (அக்டோபர் 8)  100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது.

இதன் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏரியின் நீர் வரத்து கிடுகிடுவென அதிகரித்தது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24  அடியாக உள்ள நிலையில், தற்போது நீர் மட்டம் 22 அடியாக உயர்ந்தது.

மேலும் இரண்டாவது நீர்வரத்து கூவம் ஆற்றில் புதுச்சத்திரம் கிராமத்தில் கொரட்டூர் அணைக்கட்டிலிருந்து வலதுபுறம் புதிய பங்காரு கால்வாய் மூலமாகவும், மூன்றாவது நீர்வரத்தான, கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 10 கனஅடி விநாடிக்கு நீர் வந்தடைகிறது.

பருவமழைக்காலம் நெருங்கியுள்ள நிலையில், தற்போதே கடல் போல் நிரம்பி காட்சியளித்த ஏரியில் இருந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

அதன்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஆட்சியர் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி நீர் இன்று மாலை திறந்துவிடப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரானது அடையாறு ஆற்றின் வழியாக சென்னை மாநகருக்குள் நுழைந்து வங்க கடலில் கலக்கும்.

இதனையடுத்து குன்றத்தூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, அனகாபுத்தூர் உள்ளிட்ட அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருபக்கம் கர்நாடகாவில் இருந்து வரும் நீர்வரத்து குறைவால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து நீர் திறப்பு இன்று முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் நிரம்பி வழியும் செம்பரம்பாக்கம் உபரி நீர் மக்களின் பாதுகாப்பு கருதி வீணாக கடலுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

World Cup: திட்டம் போட்டு களமிறங்கிய இந்தியா… சுருண்டு சரிந்த ஆஸ்திரேலியா

இஸ்ரேலில் குடும்பத்தினருடன் சிக்கிய இந்திய எம்.பி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0