விலை உயர்வை அடுத்து பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனையை தமிழ்நாடு அரசு இன்று (அக்டோபர் 9) தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக தக்காளி, வெங்காயத்தின் வரத்து குறைந்து அவற்றின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அவற்றை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனையை தமிழ்நாடு அரசு இன்று முதல் தொடங்கியுள்ளது.
நாசிக்கில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வெங்காயம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றும், ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி : ஸ்டாலின் வாழ்த்து!
இரவோடு இரவாக சாம்சங் போராட்ட குழு நிர்வாகிகள் 10 பேர் கைது!