சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாரில் ஜூலை 25 ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட பதிவாளரும், பேராசிரியருமான கோபி இன்று (ஜூலை 26) அப்பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளர் கோபி. இவர் வேதியியல் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றிவருகிறார். இவர், வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்துவரும் மாணவி ஒருவரை, விடுமுறை தினத்தில் ஆய்வறிக்கை சரிபார்க்க வேண்டும் எனச் சொல்லி கல்லூரிக்கு அழைத்ததாகவும், அப்போது அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவி அளித்த புகாரின்பேரில், சேலம் கருப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை, ஜூலை 25ஆம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், இன்று (ஜூலை 26) பதிவாளர் கோபி அப்பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்