இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மலையாளத்தில் உரையாடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜை சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 15ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. 16ஆம் தேதி முதல் மண்டல பூஜை நடைபெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் சபரிமலைக்கு தினமும் வந்த வண்ணமிருக்கிறார்கள்.
இந்தாண்டு மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஆன்லைன் புக்கிங் அவசியம் என்று கேரள அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி ஒரு நாளைக்கு 70,000 பக்தர்கள் ஆன்லைன் புக்கிங் மூலமாகவும் 10,000 பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
இதுவரை ஆன்லைன் புக்கிங் செய்வதற்கு மட்டும் ஆதார் கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது ஸ்பாட் புக்கிங்கிற்கு ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்று சபரிமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக அமைச்சர் சேகர் பாபு சபரிமலைக்கு இன்று(நவம்பர் 22) சென்றிருந்தார். ஐயப்பனை தரிசித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவரை முடிந்தால் மலையாளத்தில் பேசுமாறு அங்குள்ள பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள்.
இதற்கு “எனக்கு கொரச்சி கொரச்சி மலையாளம் வரும்” என்று சேகர் பாபு பதிலளிக்க, பரவாயில்லை உங்களால் முடிந்த அளவுக்குப் பேசுங்கள் என்று பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.
தொடர்ந்து சபரிமலை ஏற்பாடுகளை குறித்து அமைச்சர் சேகர் பாபு ” கடந்த ஆண்டு ஐயப்பன் கோயில் நடையை திறப்பதில் இருந்த பிரச்சினைகளிலிருந்து பாடம் கற்ற சபரிமலை தேவஸ்தானம் இந்தாண்டு சிறப்பாக ஏற்பாடுகளை செய்துள்ளது.
கோயில் வளாகம் சுத்தமாக உள்ளது, எக்ஸ்ட்ரா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 3 மணி முதல் மதியம் 1 வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை சாமியை பக்தர்களால் தரிசனம் செய்ய முடிகிறது” என்றார்.
தமிழ்நாடு பக்தர்களுக்காக செய்யப் பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து பேசிய அவர் ” கடந்த ஆண்டு எச்ஆர்சிஈ டிபார்ட்மெண்ட்டில் இருந்து பிஸ்கட்ஸ் ஏற்பாடு செய்துட்டுண்டு. ஈ ஆண்டும் மண்டல பூஜா மற்றும் மகர பூஜாக்கு பிஸ்கட்ஸ் ஏற்பாடு செய்யும்.
தமிழ்நாட்டிலிருந்து ரெண்டு அதிகாரிகள் நெக்ஸ்ட் வீக்ல இருந்து இங்க டூட்டில் இருக்கும். தமிழ்நாடு எச்.ஆர்.சி.இ ரிலிஜியஸ் ஆபீஸ்ல பெர்மணனட் டோல் ஃபிரீ நம்பர் ஓபன் செய்தது” என்று மலையாளம் மற்றும் தமிழ் கலந்து சேகர் பாபு பேட்டி அளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
குடியரசுத் தலைவரை வரவேற்க செந்தில் பாலாஜியை அனுப்பலாமா? ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!
நெல்லையை தொடர்ந்து கும்பகோணம்… திண்டுக்கல் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி!
‘எங்கள் அப்பாவின் கண்ணியத்தை சிதைக்காதீர்கள்!’: ஏ.ஆர். ரஹ்மானின் மகன் காட்டம்!