அன்பில் மகேஷுக்கு அன்பு கோரிக்கை வைத்த சீமான்

தமிழகம்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அன்பு கோரிக்கை வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதியமுரண்பாடு உள்ளது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று(டிசம்பர் 31) 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் அது தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Seeman asks anbil Mahesh for love

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று போராடும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சம வேலைக்கு சம ஊதியம்தான் ஆசிரியர்களின் கோரிக்கை. ஒரேபணி ஒரேஊதியம்… இதுதான் ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதைத் தருகிறேன் என்று கூறிய தமிழக அரசு தற்போது இதை நிறைவேற்றாமல் உள்ளது. ஒரு நாட்டின் ஆகச் சிறந்த வளம் அறிவு வளம். அந்த அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள் இன்று வீதியில் பட்டினியாய்க் கிடக்கிறார்கள். அப்படியென்றால், தேசத்தின் அறிவு வீதியில் கிடைக்கிறது என்று பொருள்.

இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம் கடந்த ஆட்சியிலும் நடந்தது. கடந்த ஆட்சியில் நடந்த போராட்டத்தில் நீங்கள் வந்து பங்கேற்றீர்கள். இப்போது அதிகாரத்திற்கு வந்து விட்டீர்கள்.

இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றே கேட்கிறார்கள். கோரிக்கையும் புதிது அல்ல. போராட்டமும் புதிது அல்ல.

Seeman asks anbil Mahesh for love

இந்தக் கூட்டத்தில் ஆசிரியர்களின் போராட்டம் மிக நியாயமானது. புனிதமானது. பள்ளிக்கூடம் கட்டிவிட்டீர்கள். மக்களிடம் காசை வாங்கி புனரமைப்பு பணிகளையும் செய்து விட்டீர்கள். பாடம் நடத்தப்போவது யார்?,

பாடம் நடத்தப் போகிறவர்கள்தான் பட்டினியாக தெருவில் கிடக்கிறார்களே.. நீங்கள் போய் வகுப்பு எடுப்பீர்களா? பார்த்து படிக்கும்போதே பத்து பிழை வருகிறது.

நீங்கள் பாடம் நடத்தினால்? மாணவன் எப்படி உருப்படுவான். எனவே பாடம் நடத்துபவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து அவர்களை பாடம் எடுக்க அனுப்புங்கள்.

நான் பெரிதும் அன்பு வைத்திருக்கும் தம்பி அன்பில் மகேஷ், போராடும் ஆசிரியர்களை அழைத்துப்பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அண்ணன் அன்பாக கோரிக்கை வைக்கிறேன். எல்லாவற்றுக்கும் தகுதித் தேர்வு வைக்கிறார்கள். பிரதமருக்கும் முதல்வருக்கும் அமைச்சருக்கும் ஒரு தகுதித் தேர்வு வைத்தால் எங்களுக்கும் ஒரு அறிவார்ந்த தலைவர் கிடைப்பார்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

தேர்தல் ஆணையம் கடிதம்: திருப்பி அனுப்பிய அதிமுக

திராவிட மாடல் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும்: உதயநிதி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.