சென்னை பாரிமுனையில் ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் 400 கடைகள் இயங்கி வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) 130 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் மாநகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வாடகை செலுத்தாததால் மாநகராட்சி சார்பில் கடைகளுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இருப்பினும் உரிய நேரத்தில் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்ததால் 130கடைகளில் இருந்து மட்டும் 40 லட்சம் ரூபாய் வர வேண்டி உள்ளது.
இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 130 கடைகளுக்கும் சீல் வைத்துள்ளனர்.
வாடகையை வரைவோலையாக சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில் சீல் அகற்றப்பட்டு அவர்கள் மீண்டும் கடைகளை நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
குட்கா விற்கப்பட்ட கடைக்கு சீல்!