கோடை விடுமுறை முடிந்து இன்று(ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 2023-2024 ஆம் கல்வியாண்டிற்காக ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த வருடம் கோடை வெயிலின் கொடுமை பல இடங்களில் உக்கிரமாக இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ”ஜூன் 12-ம் தேதி (இன்று) 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஜூன் 14ஆம் தேதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அதன்படி இன்று கோடை விடுமுறை முடிந்து 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து மாணவ மாணவிகள் உற்சாகமாக புதிய சீருடை அணிந்து மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு செல்லும் காட்சிகள் பல இடங்களில் பார்க்கமுடிகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
’ஆதிபுருஷ் டார்ச்சரா?’: கொந்தளிக்கும் பிரபாஷ் ரசிகர்கள்
”அஸ்வின் இல்லாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”-சச்சின்