கனமழை காரணமாகத் தமிழகத்தில் இன்று (டிசம்பர் 12) 3 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
மோனிஷா
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!