கனமழை காரணமாக திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை புரட்டிப் போட்டுவிட்டு சென்றது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து மேற்கண்ட 4 மாவட்டங்களும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இதனிடையே இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
2024 புத்தாண்டில் கார் வாங்கப் போகிறீர்களா? இதைக் கொஞ்சம் யோசிங்க…!