ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதால் சென்னையில் நாளை (டிசம்பர் 2) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். எனினும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாளை முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்பதால் மற்ற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
IndVsAus: ரூபாய் 3.16 கோடி கரண்ட் பில் பெண்டிங்… இந்தியா-ஆஸ்திரேலியா 4-வது டி20 போட்டியில் சிக்கல்?
சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ்க்கு கட்டாய ஓய்வு!