கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகம்

மழை காரணமாக இன்று (ஜூன் 20) திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இன்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காலையிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள்.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை கப்பலை பரிசளிக்கும் இந்தியா!

கிச்சன் கீர்த்தனா : தயிர் – வெஜிடபிள் உப்புமா!

+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *