மாண்டஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் நாளை(டிசம்பர் 10) 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் தீவிர புயல் இன்று(டிசம்பர் 9) காலை வலுவிழந்து புயலாக காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென் காரைக்காலுக்கு வடகிழக்கே நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவு நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால பல மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 8 மாவட்டங்களில் நாளை(டிசம்பர் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளைப் பொறுத்தவரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருவதால் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அடுத்த வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச-10) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கலை.ரா
ராஜேந்திர பாலாஜியை சிக்க வைத்தவர் சிக்கியது எப்படி?
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: ரசிகர்களின் விமர்சனம் இதோ!