தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகம்

அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் உயர்கல்வி படிப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை உயர்கல்வி படிப்பை உறுதி செய்யவும், திறன் மிக்க மாணவர்களாக உருவாக்கவும் தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத்திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்யும் இலக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வியில் சேர இயலாத ஒவ்வொரு மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முகாம்கள் நடத்தியும், கல்வி உதவித்தொகை வழங்கியும் கல்லூரி படிப்பில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு சூழ்நிலைகளால் கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கும் தனியார் நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் உயர்கல்வியில் சேராத சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் கண்டறிந்து அதில் 1600 மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் ஏற்படுத்தி, அதன் மூலம் தனது விருப்ப பாடப்பிரிவினை தேர்வு செய்திட உதவ வேண்டும்.

School Education Department orders

ஒவ்வொரு மாணவரும்  2023-24ல் தான் பயில விருப்பும் பாடபிரிவுகளில் மூன்றினை முன்னுரிமை அடிப்படையில் மாணவரால் தேர்வு செய்ய வேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்த உத்தேச  பாடப்பிரிவுகளை பள்ளிக் கல்வி துறையின் “நான் முதல்வன்” போர்டலில்  ஒவ்வொரு மாணவருக்கும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், சட்டம், வேளாண்மை, மீன்வளம் மற்றும் பிற கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் சார்ந்த விவரங்கள் கொண்ட சிற்றேடுகளை கல்லூரிகளில் இருந்து பெற்று மாணவர்கள் வழங்க வேண்டும்.

மாணவர்கள் எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதனை ஆசிரியர்கள் பயிற்றுவிக்க வேண்டும்.  இந்த நடவடிக்கைகளை டிச. 7 முதல் 9 வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

அனைத்து மாணவர்களும் விருப்பப்பாடங்களை தேர்வு செய்துள்ளனரா என்பதனை பள்ளி தலைமையாசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.

மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதை ஆர்வமூட்ட அனைத்து அரசு பள்ளி மாணவர்களையும் அருகாமையிலுள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று காட்ட வேண்டும்.

தொடர் நடவடிக்கைகளால் உயர் கல்வியில் அனைத்து மாணவர்களும் சேருவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநிலத்திட்ட இயக்குனர் சுதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கலை.ரா

கள்ளக்குறிச்சி கலவரம்: மீண்டும் திறக்கப்பட்ட பள்ளி!

ஜெ நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.