கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

தமிழகம்

தொடர் கனமழை எதிரொலியாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று (நவம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

school colleges leave today in tamilnadu puduvai karaikkaal

இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த 5 நாட்களாகத் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் சீர்காழியில் அதிபட்சமாக 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், கொள்ளிடம் 14.8 செ.மீ, தரங்கம்பாடி 8.9 செ.மீ, மணல்மேடு 7.3 செ.மீ, மயிலாடுதுறையில் 2.4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் அதிகபட்சமாக 11.5 செ.மீ மழையும் லால்பேட்டையில் 10.5 செ.மீ மழையும் பெய்துள்ளது.

மோனிஷா

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

செப்டம்பரில்  இந்தியாவில்  தடை செய்யப்பட்ட  வாட்ஸ்அப் கணக்குகள்  26.85 லட்சம்: காரணம் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *