மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 9) இரவு 11 மணிக்கு மேல் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையைக் கடக்க உள்ளது. தற்போது மாண்டஸ் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இதனால் நேற்று (டிசம்பர் 8) இரவு முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் 10 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும்
தேனி, தூத்துக்குடி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள்
தருமபுரி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
‘கச்சா பாதாம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வடிவேலு