மழை பாதிப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாததால் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நாளை சென்னையில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகா மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நோ எலிமினேஷன்… காரணம் என்ன?
மழை பாதிப்பு: மின் கட்டணம் செலுத்த அவகாசம்!