தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று (அக்டோபர் 21) மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாகத் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மோனிஷா
கிச்சன் கீர்த்தனா : இறால் மசால்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!