தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
கனமழை எதிரொலியாக மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்.
பள்ளி கல்லூரிகளுக்கு
சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் இன்றும் நாளையும் (நவம்பர் 5) இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும்
தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவள்ளூர், ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
’அரபிக் குத்து’ பாடலுக்கு ஆட்டம் போட்ட தாத்தா: வைரலான வீடியோ!