மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை (டிசம்பர் 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரண உதவிகளை மாநில பேரிடர் மீட்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மழை பாதிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நாளை சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகா மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மிக்ஜாம் புயல் : பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் ஆறுதல்!
டிஎன்பிஎஸ்சிக்கு புதிய செயலாளர்!