தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுபெற்று வருகிறது.
இதனால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்தது.
மேலும் நாளை (நவம்பர் 13) வரை தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று தமிழகத்தின் 28 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
1.சென்னை
2.காஞ்சிபுரம்
3.செங்கல்பட்டு
4.திருவள்ளூர்
5.வேலூர்
6.ராணிப்பேட்டை
7.திருவண்ணாமலை
8.விழுப்புரம்
9.கடலூர்
10.திருவாரூர்
11.நாகை
12.மயிலாடுதுறை
13.தஞ்சை
14.அரியலூர்
15.பெரம்பலூர்
16.புதுக்கோட்டை
17.சேலம்
18.ராமநாதபுரம்
19.கள்ளக்குறிச்சி
20.திருச்சி
21.மதுரை
22.திண்டுக்கல்
23.தேனி
24.கரூர்
25 திருப்பத்தூர்
ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் நாமக்கல், சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தொழிலில் சிறக்க எந்தக் கடவுளைக் கும்பிடலாம்?
சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்க்கும் கனமழை!