அரையாண்டு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சிபிஎஸ்சி மற்றும் மாநில கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்றுடன் (டிசம்பர் 23) முடிவடைகிறது.
நாளை (டிசம்பர் 24) முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை 9 நாட்கள் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 2 ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
விடுமுறை அளிக்கப்பட்டாலும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மெண்ட் மட்டும் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜக: பதட்டத்தில் தூத்துக்குடி
Comments are closed.