தீ பிடித்த பள்ளி பேருந்து : மாணவர்களின் நிலை?

தமிழகம்

மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களை அழைத்து வரவும், சென்று விடவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் சேந்தமங்கலம் வழியில் பாரதிதாசன் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று (செப்டம்பர் 10) காலை 5 மாணவ மாணவிகளுடன் சென்று கொண்டிருந்தது.
சேந்தமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது பேருந்திலிருந்து புகை வருதைக் கண்டு சாலையிலிருந்த பொது மக்கள் ஓட்டுநரிடம் தெரிவித்தனர்.


இதையடுத்து ஓட்டுநர் துரிதமாகச் செயல்பட்டு வாகனத்திலிருந்த மாணவ மாணவிகளை அவசர அவசரமாக கீழே இறக்கினார். தொடர்ந்து சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதும் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நல்வாய்ப்பாக மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து ஓட்டுநர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதுபோன்று பள்ளி வாகனம் தீ பிடித்ததற்கு காரணம் என்ன? முறையாக பராமரிக்கப்பட்டதா உள்ளிட்ட கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரியா

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *