நெல்லை மற்றும் தூத்துக்குடியில் நாளை (டிசம்பர் 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 3 நாட்களாக தென் மாவட்டங்களை புரட்டிப் போட்ட அதி கனமழை நேற்றிலிருந்து ஓய்ந்துள்ளது. இந்த வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்களை சூழ்ந்த வெள்ளத்தில் இருந்து தற்போது மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
கனமழை காரணமாக கடந்த 3 தினங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் காரணமாக நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்கள் செயல்படும் கல்லூரிகள் தவிர்த்துப் பிற கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
தென்காசியில் நாளை வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஸ்டாலின் ட்வீட் டெலிட்… தேவிபாரதிக்கு கன்பார்ம் ஆன சாகித்ய அகாடமி!