சம்பளம் குறைப்பு: தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்!

தமிழகம்

பல்லடத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளப் பணம் ரூ.20 குறைவாக வழங்கியதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்லடம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 56,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் 36 பேர், ஒப்பந்த அடிப்படையில் 181 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தனித்தனியாக பிரித்து வாங்குவதற்கு தூய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நாள்தோறும் 18 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த மாதம் சம்பளம் குறைவாக வழங்கியதால் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று அதன் அடிப்படையில் தினசரி ரூ.440 சம்பளம் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த நிலையில் இந்த மாதம் ரூ.420 மட்டுமே வழங்கப்பட்டதாகவும், 20 ரூபாய் பிடித்தம் செய்துள்ளதாகவும், உடனடியாக ஒப்பந்த சம்பளத்தை வழங்க வலியுறுத்தி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களுடன் நகராட்சி ஆணையாளர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இந்த நிலை தொடர்ந்தால் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை!

சனாதன LAW!?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0