ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெட்ரோல் நிலையம் அமைக்க கடனுதவி வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர் முதல்முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல் அல்லது டீசல் (ஒரு டேங்கர்) தொகை தாட்கோ மூலம் கடனாக வழங்கப்படும். மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நபர் தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளரை (திட்டங்கள்) தொடர்பு கொள்ளலாம்.
இந்தத் திட்டத்துக்கு www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண், பெண் என அனைவரும் வருகிற 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: ராகி ஸ்வீட் சேமியா
அந்த மூணு பேரு நிலைமை: அப்டேட் குமாரு