பொங்கல் அன்று நடைபெறும் எஸ்.பி.ஐ தேர்வை ஒத்திவைக்கக் கோரி நுங்கம்பாக்கம் எஸ்.பி.ஐ வங்கி பொதுமேலாளர் அறையில் மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகிறார்.
எஸ்.பி.ஐ வங்கியில் கிளர்க் முதன்மை தேர்வு தமிழர் திருநாள் பொங்கல் அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தேர்வர்கள் தேதி எழுவதில் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வு மாநில அரசு விடுமுறையைக் கணக்கில் கொள்ளாமல் அமைக்கப்பட்டுள்ளதால், தேர்வு தேதியை மாற்றியமைக்கத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் எஸ்பிஐ வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில்,
100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி வட்டார அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (ஜனவரி 13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பேச்சு வார்த்தை நடத்த வங்கி ஊழியர்கள் அழைத்த நிலையில், உயரதிகாரிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை.
இதனால் சு.வெங்கடேசன் வங்கி பொதுமேலாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவருடன் இணைந்து விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் தற்போது உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மோனிஷா
தலிபான்களால் தயாரிக்கப்பட்ட முதல் சூப்பர் கார்!
மெட்ரோ பாலம் விழுந்து விபத்து: தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!