சவுக்கு சங்கர் டிஸ்மிஸ்: சிறைக்குச் சென்ற நோட்டீஸ்!

தமிழகம்

அரசுப் பணியில் இருந்து சவுக்கு சங்கர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரை நிரந்தரமாக பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். இவர், அரசு ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அரசு, அவருக்கு மாதந்தோறும் அவருடைய சம்பளத்தில் பாதியை இதுநாள் வரை வழங்கி வந்தது.

இந்த நிலையில், தனியார் யுடியுப் சேனல்களில் அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இதில், கடந்த ஜூலை 22ம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது என்று யுடியுப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் 15ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது அவருக்கு, நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 6 மாத சிறை தண்டனை அளித்து உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 24) கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர், சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பணி நீக்கம் செய்வதற்கான Show cause நோட்டீசை வழங்கச் சென்றனர். சிறை அதிகாரியுடன் சவுக்கு சங்கருக்கு வழங்க முயன்றபோது அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து, அந்த நோட்டீஸ், அவர் அடைக்கப்பட்டிருக்கும் சிறையின் அறை வாசலில் ஒட்டப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கருக்கு முதற்கட்டமாக Show cause நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்படுவார். இதனால், அவருக்கு அரசு வழங்கிவந்த பாதி சம்பளமும் இனி வர வாய்ப்பில்லை என்கிறார்கள் காவல்துறை தரப்பில்.

ஜெ.பிரகாஷ்

மாசெ ஆகிறார்  முன்னாள் அமைச்சர்  பழனியப்பன்: வலுவாகும் செந்தில்பாலாஜி கூடாரம்!

மதுரை எய்ம்ஸ்! உண்மை நிலை என்ன? மக்கள் நீதி மய்யம் கேள்வி

+1
1
+1
2
+1
1
+1
6
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *