சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!

Published On:

| By Selvam

சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (மே 13) உத்தரவிட்டுள்ளது.

யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் காவல்துறை உயரதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் கோவை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.

தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது தேனியில் கஞ்சா பயன்படுத்தியதாக வழக்கு, பத்திரிகையாளர் சந்தியா ரவிச்சந்தர், தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலெட்சுமி அளித்த புகார் என 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று (மே 12) உத்தரவிட்டார்.

இந்தநிலையில், பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி கோவை சைபர் கிரைம் போலீசார் கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கரை நாளை மாலை 5 மணி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர். மேலும், விசாரணையின் போது சவுக்கு சங்கர் தனது வழக்கறிஞரை 3 மணி நேரத்திற்கு ஒருமுறை பார்வையிடவும் அனுமதி அளித்தனர். நாளை மாலை 5 மணிக்கு சவுக்கு சங்கரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இஸ்லாமிய பெண்களின் புர்காவை விலக்கி சோதனை செய்த பாஜக வேட்பாளர்: தேர்தல் ஆணையம் ஆக்‌ஷன்!

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதியா? – ஆளுநர் மாளிகை விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment