சவுக்கு சங்கர் மீதான குண்டாஸை ரத்து செய்ய தொடரப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்களை இழிவாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டாஸும் பாய்ந்தது.
இந்நிலையில் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும்… அவர் மீதான குண்டாஸை ரத்து செய்து விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் கமலா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பிபி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘என்னவெல்லாம் செய்யமாட்டேன் என்று பட்டியலிட்டு உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டனர்.
இந்த மனு மீதான இறுதி விசாரணையை மே 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.
அதன்படி இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குண்டாஸை ரத்து செய்ய கோரிய வழக்கில் இன்றே இறுதி விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால் நீதிபதி பிபி.பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம் அளிக்க வேண்டும். அதனால் இன்றே இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
இதனால் இன்று மதியம் சவுக்கு சங்கர் வழக்கில் வெளியாகும் தீர்ப்பு மாறுபட்ட தீர்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்பதில் இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வெள்ளை உடை திருவள்ளுவர் சிலை : ஆளுநர் வழிபாடு!
சங்கிகள் இன்னும் எந்த கருத்தையும் சொல்லவில்லியே?