நீதித்துறை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்த சவுக்கு சங்கருக்கு ஜாமீன் நிபந்தனைகளை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்திருந்தார். சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு 4 வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்தநிலையில், சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதித்துறை பதிவாளர் வெங்கட வர்தன் ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளை தெரிவித்துள்ளார்.
அதன்படி, சவுக்கு சங்கர் தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்களில் எந்த கருத்துக்களையும் பதிவிடக்கூடாது.
நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக சவுக்கு சங்கர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக வேண்டும்.
நீதித்துறை குறித்து சவுக்கு சங்கர் எந்த கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது.
ரூ.20 ஆயிரம் பத்திரத்தில் இரண்டு நபர்கள் பிணையம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து வழக்குகளிலும் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதால், அவர் இன்று அல்லது திங்கட்கிழமை (21.11.2022) கடலூர் மத்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
கொட்டும் கலெக்ஷன்: பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த பொன்னியின் செல்வன்
மலையாள திரையுலகை கலக்கும் வினீத் சீனிவாசன்