இந்த வாரம் சனிக்கிழமை (டிசம்பர் 3) சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வேலை நாள் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகப் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆகையால் விடுமுறை அளிக்கப்பட்ட வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் சனிக்கிழமை (டிசம்பர் 3) சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
“தொடர் பெருமழையின் காரணமாகச் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் சனிக்கிழமை (டிசம்பர் 3) அன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாகக் கருதிச் செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் : யார் இந்த வாஷிங்டன் சுந்தர்?