வரும் சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும், விடுமுறை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24ஆம் தேதி, திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. விடுமுறையை முன்னிட்டு ஊருக்கு சென்றதால் மறுநாள் செவ்வாய் கிழமை உடனடியாக பணிக்கு திரும்புவதில் சிரமம் ஏற்படும் எனக்கூறி பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இதை, ஏற்று 25ஆம் தேதி விடுமுறை அளித்தது தமிழக அரசு.
அப்போதே, இந்த விடுமுறை தினம் மற்றொரு விடுமுறை தினத்தில் ஈடு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதனிடையே மழை காரணமாக மாணவர்களுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி விடுமுறைக்கு பதிலாக வரும் 19ஆம் தேதி பள்ளிகளுக்கு வேலைநாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 25ஆம் தேதி செவ்வாய் கிழமை என்ன டைம் டேபிள் படி வகுப்பு நடக்குமோ, அதன்படி வரும் சனிக்கிழமை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
மோர்பி பாலம்: உயர்நீதிமன்றம் எழுப்பிய புதிய கேள்வி?
அரசு அனுமதியின்றி சிலை கூடாது : நீதிமன்றம் எச்சரிக்கை!