தூங்காமல் புலம்பிய கொலையாளி : 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு!

Published On:

| By Kalai

கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷை புழல் சிறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காதலை நிராகரித்ததால் கல்லூரி மாணவி சத்யாவை அக்டோபர் 13 ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், மின்சார ரயில் முன் தள்ளி கொலை செய்தார் சதீஷ்.

கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை துரைப்பாக்கம் அருகே கைது செய்த காவல்துறை நேற்று (அக்டோபர் 14) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவரை 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி மோகனாம்பாள் உத்தரவிட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷை 24 மணி நேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில்  காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சத்யாவை கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்ததாக சதீஷ் போலீசிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறைத்துறை நிர்வாகம் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷ் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் புலம்பிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவருக்கு சிறையில் கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

கலை.ரா

சாதிச் சான்றிதழ் கேட்டு தீக்குளித்தவர் மனைவி தற்கொலை முயற்சி!

22% ஈரப்பத நெல் கொள்முதல்: தஞ்சையில் மத்தியக்குழு ஆய்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel