சத்து மாவு என்றால் அது, குழந்தைகளுக்கான உணவு என்றுதான் நினைக்கிறோம். அந்த சத்து மாவில் அனைவருக்கும் ஏற்ற சுவையான சீடையும் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
சத்து மாவு – ஒரு கப்
பனை வெல்லம் அல்லது வெல்லம் – அரை கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
உளுத்த மாவு – ஒரு டீஸ்பூன் (உளுத்தம்பருப்பை வறுத்து அரைத்தது)
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சத்து மாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்து எடுக்கவும். வெல்லத்தைத் தூளாக்கிச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்து உருட்டு பாகு பதம் வந்ததும் இறக்கவும். இதனுடன் சத்து மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், உளுத்த மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஆறிய பிறகு சிறிய சீடைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சீடைகளைப் போட்டுக் கருகவிடாமல், சிவக்கப் பொரித்து எடுக்கவும். ஆறியதும் கரகரப்பாக இருக்கும்.
குறிப்பு: சிறுதானியங்களை வறுத்து அரைத்தும் இந்தச் சீடை செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து: 7 பேர் பலி!
திருவண்ணாமலை தீபம்: தீயாய் வேலை செய்யும் அமைச்சர்கள், அதிகாரிகள்- ஸ்பாட் ரிப்போர்ட்!
‘மலைப்பாம்புகள் தப்பிக்க யூரின் அடிக்கும்’ – 500 பாம்புகள் பிடித்த ரோஷினி பேட்டி!
ரெட் அலர்ட் : மூன்று மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
இதுதான் வித்தியாசம் போல : அப்டேட் குமாரு
பரபர இறுதிச்சுற்று… லிரனை வீழ்த்தி இளம் உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்