மாரடைப்பால் மரணமடைந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஆன்மிகவாதியான பங்காரு அடிகளார் நேற்று (அக்டோபர் 19) மாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரமணடைந்த செய்தி அறிந்த உடன் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் பங்காரு அடிகளாரின் உடலுக்கு சசிகலா சிவப்பு சேலையில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தற்போது பங்காரு அடிகளாரின் உடல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் அச்சிரப்பாக்கம், மேல்மருவத்தூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பங்காரு அடிகளாரின் உடல் இன்று மாலை 5 மணிக்கு ஆதிபராசக்தி கோவிலில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
விஜயின் கேரியரில் இமாலய வசூல் சாதனை படைத்த லியோ!
பிளாஸ்டிக் தடை… தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும்: உச்சநீதிமன்றம்!