சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணுவைக் கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கருக்கு தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (செப்டம்பர் 6) சால்வை அணிவித்து கௌரவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தும் மகாவிஷ்ணு என்பவர் நேற்று ஆன்மீக சொற்பொழிவு நடத்தியுள்ளார்.
அதில் அவர், பாவம், புண்ணியம், முன் ஜென்மம் போன்றவற்றைப் பற்றி மாணவர்களிடையே பேசியுள்ளார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த , அந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சங்கர் ” இது ஆன்மீக சொற்பொழிவா… நீங்கள் கர்மா பற்றியதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? பள்ளியில் ஆன்மீகம் பற்றிப் பேசக்கூடாது” என்று கண்டித்துள்ளார்.
அதற்கு மகாவிஷ்ணு “அப்படி யார் சொன்னது? அப்படி சட்டத்தில் இடம் உள்ளதா?” என்று அவரிடம் கடுமையாக கேள்வி கேட்டார். இதனால் அங்குச் சர்ச்சை ஏற்பட்டது. எனினும் மகா விஷ்ணுவின் பேச்சை கண்டித்த ஆசிரியர் சங்கருக்கு சமூகவலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான் அதே பள்ளியில் இன்று பேசிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ” ஆசிரியர் சங்கர் கற்ற கல்வி தான் பிற்போக்கு சிந்தனைகளைப் பேசும் நபர்களை கேள்வி கேட்க வைத்துள்ளது.” என்று ஆசிரியர் சங்கரைப் பாராட்டிப் பேசினார். பின்னர் அவருக்கு அனைவர் முன்னிலையிலும் சால்வை அணிவித்து கௌரவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அசோக் நகர் பள்ளி விவகாரம் – 4 நாட்களில் ஆக்ஷன் – அன்பில் மகேஷ் பேட்டி!
அமெரிக்கா வரை எதிரொலித்த அசோக் நகர் பள்ளி விவகாரம்… ஸ்டாலின் பதில்!