Sand robbery case: District Collectors ordered to appear in person on April 25

மணல் கொள்ளை வழக்கு: மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!

தமிழகம்

மணல் கொள்ளை வழக்கில் தமிழகத்தின் 5 மாவட்ட ஆட்சியர்கள் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி  நேரில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 2) உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட, கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின.

இது தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், ஓய்வுப் பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் உள்ளிட்ட பலருக்கு அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த சம்மனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்மந்தபட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.

அதேநேரம் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. ஆனால், உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் மீதான விசாரணை பிப்ரவரி 27ஆ தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராவதில் என்ன சிக்கல் இருக்கிறது என கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு தொடர்பாக விளக்கமளித்துள்ள தமிழக அரசு, “மணல் கொள்ளை வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராவதில் எந்த சிக்கலும் இல்லை.

தேர்தல் நேரம் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்ரல் மாத இறுதிக்குள் மணல் கொள்ளை தொடர்பான தரவுகள் அமலாக்கத்துறைக்கு அனுப்பப்படும்”எனத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மணல் கொள்கை விவகாரத்தில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று சம்மந்தப்பட்ட 5 மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்”என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“தயாராக இருங்கள்” : மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்… எச்சரித்த உச்சநீதிமன்றம்!

ஸ்டார் ஹீரோவிற்கு வில்லியாகும் ஆண்ட்ரியா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *