sand quarry case madras high court

மணல் குவாரி வழக்கில் இன்று தீர்ப்பு!

தமிழகம்

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 28) தீர்ப்பளிக்கிறது. sand quarry case madras high court

மணல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்டை அளவை விட கூடுதல் மணல் எடுப்பதாக கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி முத்தையா கடந்த நவம்பர் 20-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

இந்தசூழலில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி,

“மணல் விவகாரத்தில் நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தொடர் விசாரணை நடத்தினால் மட்டுமே அனைத்து ஆவணங்களையும் திரட்ட முடியும்.

எனவே தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி, “மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் தான் ஆட்சியாளர்கள் வருகிறார்கள் என்பதால் மாநில அரசு மனுத்தாக்கல் செய்வதில் தவறில்லை.

கனிமள சட்டம் அமலாக்கத்துறையின் கீழ் வராது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு சம்மன் அனுப்ப அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மணல் மோசடிகளை தடுப்பதற்கான அதிகாரிகளிடம் விசாரணைக்கு உதவ அமலாக்கத்துறை கோரிக்கை விடுக்கலாமே தவிர சம்மன் அனுப்ப முடியாது. அமலாக்கத்துறையின் இந்த செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அமேசானில் வேலை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தைப்பூசம்: மேல்மருவத்தூரில் நின்று செல்லும் ரயில்கள்!

இது தான் ஜன் கி பாத் தெரியுமா?: அப்டேட் குமாரு

sand quarry case madras high court

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *