இதே நாள்… இதே தாமிரபரணி: நூற்றாண்டு வெள்ளத்தின் நினைவலைகள்!

தமிழகம்

திருநெல்வேலி தாமிபரபரணி ஆற்றில் கடந்த நான்கு நாட்களாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மாவட்டத்தில் உள்ள ஒரு சில பெரிய ஏரிகள் உடைந்துள்ளன. நெல்லை டவுண், சன்னியாசி கிராமம், கைலாசபுரம், வீரராகவபுரம், சிந்துபூந்துறை ஆகிய பகுதிகள் 3 முதல் 5 அடி வரை நீரில் மூழ்கியுள்ளன.

திருநெல்வேலி பாலம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் கடந்த மூன்று நாட்களாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. ரயில் நிலைய பதிவுகள், ஊழியர்கள் குடியிருப்புகள் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தின் இருபுறமும் சுமார் நான்கு மைல் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியைத் தாண்டிய அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

பல தந்தி போஸ்ட்கள் அடித்து செல்லப்பட்டு, ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தென்காசி முதல் திருவனந்தபுரம் வரையிலான ரயில் பாதை தற்போது பாதிப்பின்றி உள்ளது….

மேற்கூறப்பட்டுள்ள இந்த செய்தி இதே நாளில் நூறு ஆண்டுகளுக்கு 1923ஆம் ஆண்டு அன்றைய தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு பற்றி தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி.

ஆனால் நூற்றாண்டு கடந்து தற்போது பெய்த அதிகனமழையின் பாதிப்புகளை அப்படியே விவரிக்கிறது இந்த செய்தி. ’மதுரா வெள்ளம்’ என்று குறிப்பிட்டு அதனை தற்போது செய்தியாக இன்றைய நாளிதழில் வெளியிட்டு நினைவு கூர்ந்துள்ளது தி இந்து ஆங்கில நாளிதழ்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அர்ஜூனா விருது: 2022ல் தம்பி… 2023ல் அக்கா!

கிறிஸ்துமஸ் விடுமுறை : சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

இதெல்லாம் கமல் சாரோட நிப்பாட்டிக்கங்க… மாயாவின் மூக்குடைத்த விக்ரம் தந்தை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *