புரதம் நிறைந்த சாமை அரிசி எல்லா வயதினருக்கும் ஏற்றது. சுலபமாக ஜீரணிக்க கூடிய இந்த சாமையில் பூண்டு சேர்த்த மசியல் சாதம் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
சாமை சாதம் – ஒரு கப்
தோல் நீக்கிய பூண்டு – 20 பற்கள்
காய்ந்த மிளகாய் – 4
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். ஆறிய பிறகு விழுதாக அரைத்து எடுக்கவும்.
அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடான சாமை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். அப்பளத்துடன் பரிமாறவும்.