பாரம்பரிய உணவுகளில் சாமை அரிசிக்கு தனியிடம் உண்டு. சாமையில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்தும் புரதமும் நிறைந்துள்ளது. இது எலும்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வளிக்கும்.
அப்படிப்பட்ட சாமையில் தற்போது மலிவாகக் கிடைக்கும் மாங்காய் சேர்த்து சத்தான சாமை மாங்காய் சாதம் செய்ய இந்த ரெசிப்பி உதவும். உட்கார்ந்து கொண்டே பணியாற்றுபவர்களுக்கு இந்த சாதம் ஊட்டமளிக்கும்.
என்ன தேவை?
சாமை அரிசி – ஒரு கப்
மாங்காய்த் துருவல் – கால் கப்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா கால் டீஸ்பூன்
இஞ்சித்துருவல் – கால் டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
சாமை அரிசியை இரண்டரை கப் நீரில் வேக வைத்து எடுத்து, ஹாட் பாக்ஸில் வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கீறிய பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், கறிவேப்பிலையைச் சேர்த்துத் தாளிக்கவும்.
இதனுடன் மாங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கிளறவும். இத்துடன் சாமை சாதம், ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். நன்கு கிளறி எடுத்துப் பரிமாறவும்.
சாப்பிட பிடிக்காத நிலைமையில் என்ன சாப்பிடுவது?