கிச்சன் கீர்த்தனா: சாமை – கறிவேப்பிலை வற்றல்

தமிழகம்

குழந்தைகளுக்கு மழைக்காலம் கொண்டாட்டம் என்றால் இல்லத்தரசிகளுக்கு கோடைக்காலம் கொண்டாட்டம். வருடம் முழுக்க ‘கரக் மொறுக்’ என்று நொறுக்கித் தள்ளவேண்டிய அத்தனை வற்றல் வகைகளும் ரக ரகமாய் இவர்களது கைப்பக்குவத்தில் பதமாகத் தயாராகும். அப்படிப்பட்டவர்களுக்கு சுவையான இந்த சாமை – கறிவேப்பிலை வற்றல் ரெசிப்பியும் உதவும்.

என்ன தேவை?

சாமை மாவு – 2 கப்
ஜவ்வரிசி மாவு – அரை கப்
கறிவேப்பிலை, பச்சை மிளகாய் அரைத்த விழுது – அரை கப்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சாமை மாவு, ஜவ்வரிசி மாவு, பெருங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். கறிவேப்பிலை, பச்சைமிளகாய் விழுதுடன் 2 மடங்கு நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதி வரும் போது கலந்த மாவைக் கொட்டிக் கிளறி, கெட்டியானதும் ஆறவிட்டு, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டுப் பிழிந்து காய விடவும் தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.

தினை – தக்காளி வற்றல்

வரகுக் கூழ் வற்றல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *