Samai Athirasam Recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: சாமை அதிரசம்!

தமிழகம்

இந்த விஜயதசமி பூஜையின்போது வீட்டுக்கு வருபவர்களுக்குப் பிரசாதமாக என்ன வழங்கலாம் என்று யோசிப்பவர்கள், இந்த சாமை அதிரசம் செய்து கொடுத்து அசத்தலாம்.

என்ன தேவை?

சாமை அரிசி மாவு – 2 கப்
துருவிய வெல்லம் – 2 கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சாமை அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நிழலில் உலரவைத்து, மெஷினில் கொடுத்து அரைக்கவும். வெல்லத் துடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து பாகு காய்ச்சி இறக்கி, சாமை அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்துக் கிளறவும் (அடுப்பில் வைத்துக் கிளறக் கூடாது). இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை 2 நாட்கள் அப்படியே வைத்து, பின்னர் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் வட்டமாகத் தட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : ராகி லட்டு

கிச்சன் கீர்த்தனா : மில்லட் பொரிவிளங்காய் உருண்டை

திருவள்ளூர் ரயில் விபத்து: 19 பேர் காயம்… உதயநிதி நேரில் ஆறுதல்!

திருச்சி விமானம் தரையிறங்குவதில் தாமதம்: விசாரணைக்கு உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *