முறைகேடு புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித் துறை இன்று (பிப்ரவரி 9) அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக தங்க வேல் பணியாற்றி வந்தார். அவர் மீது பல்கலை பணிகளை அவுட் சோர்சிங் முறையில் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் தனது துறைக்கு தேவையான கணிப்பொறி, இணையம் மற்றும் உபகரணங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அரசு கூடுதல் செயலர் பழனிசாமி தலைமையிலான இருவர் குழு விசாரணை நடத்தியது. அப்போது தங்கவேல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது நிரூபணமானது.
இதனையடுத்து தற்போது விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித் துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 29ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், முறைகேடு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தங்கவேல், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சிஎஸ்கே அணியின் புதிய ஸ்பான்சர் ஆனது ஏன்? : எதிஹாட் நிறுவன அதிகாரி விளக்கம்!
”அன்னைக்கு இதே தெருவுல கார் வாஷ் பண்ணிட்டு இருந்தேன்” : பட விழாவில் கலங்கிய புகழ்