பொன்னியின் செல்வன் : ரசிகர்களுக்கு தியேட்டரில் அதிர்ச்சி!

தமிழகம்

சேலம் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் விற்பனை செய்யப்பட்ட, உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத குளிர்பானங்களை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கல்கியின் பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இன்று (செப்டம்பர் 30) வெளியானது.

இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் என்ற ஐந்து திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கில் மூன்று திரைகளில் பொன்னியின் செல்வன் பார்க்க வந்த ரசிகர்கள் இடைவேளை நேரத்தில் கேண்டீனுக்கு சென்றனர்.

கேண்டீனில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள் தரமற்றதாகவும், உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

மேலும் ரோஸ் மில்க் மற்றும் பாதாம் மில்க் தயாரிப்பதற்காக அங்குள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பாலில் பூச்சிகள் கிடந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குளிர்பானங்கள் மற்றும் மற்ற தின்பண்டங்களை ஆய்வு செய்தனர்.

அதில் குளிர்பானங்களில் உற்பத்தி தேதி குறிப்பிடவில்லை.

மேலும் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பாலில் பூச்சிகள் விழுந்து இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

ஆகையால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கிருந்த இரண்டு கேண்டீன்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 குளிர்பான பாட்டில்கள், காலாவதியான பிஸ்கேட் பாக்கெட்டுகள், 50 லிட்டருக்கும் மேற்பட்ட பால் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த பால் மற்றுஙம் குளிர்பானங்களை கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் காலாவதி பொருட்கள் விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை தொடர்பாக விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

மோனிஷா

கர்நாடகாவில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல்

டி20 உலக கோப்பை: பும்ராவிற்கு பதில் யார்?

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.