சேலத்தில் நாய் குறுக்கே வந்ததையடுத்து, பேருந்து ஓட்டுநர் திடீர் பிரேக் போட்டதால், நடத்துனர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் செட்டிசாவடி பகுதியில் இருந்து மாநகர பேருந்து ஒன்று சேலம் நகர பேருந்து நிலையத்திற்கு இன்று (ஆகஸ்டு 23) காலை வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் நடத்துனராக இருந்துள்ளார்.
சேலம் மாவட்ட பசவக்கல் என்ற பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்தது.
இதனால் ஓட்டுனர் பிரேக் போட்டதால் முன் பக்க படிக்கட்டு அருகே நின்றிருந்த நடத்துனர் பேருந்திலிருந்து நிலை தடுமாறி சாலையில் சடாரென விழுந்துள்ளார்.
இதில் ராஜேந்திரன் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகளவில் வெளியேறி உள்ளது.
இதனை அடுத்து ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்து தாமதமானதால் பேருந்திலேயே அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாயை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிரேக் போட்ட ஓட்டுநரால், நடத்துநர் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சேலம் அருகே விபத்தில் ஆறு பேர் பலி!